Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகம் ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ளது. இதற்கான முதல் கட்ட அனுமதியை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கு தவெக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ள கட்சிகளில் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அப்பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அங்கு ஏற்கனவே கூட்ட நெரிசல் இருக்கும் நிலையில் மேலும் போக்குவரத்து பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த திரளான மீனவர்களும், மீனவ மகளிரும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும், குடியிருப்பு மற்றும் மறுவாழ்வு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
சீனிவாசபுரம் சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / vidya.b