மீண்டும் உச்சம் நோக்கி தங்கம் வெள்ளி விலை - மக்கள் அதிர்ச்சி
சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.) செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்று செப்டம்பர் 18ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,155க்கும் சவரனுக்கு ரூ
தங்கம்


சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

அந்த வகையில், நேற்று செப்டம்பர் 18ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,155க்கும் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,285க்கும் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,055க்கும், சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P