கேக்கை முகத்தில் பூசியதால் ஆத்திரம்- நண்பரை கொன்ற வாலிபர்
ஜம்மு , 19 செப்டம்பர் (ஹி.ச.) ஜம்மு நகரில் லோயர் ரூப் நகர் பகுதி அருகே நீரஜ் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவரது நண்பரான பவன் நாயர் (34), கேக்கின் ஒரு பகுதியை எடுத்து நீரஜின் முகத்தில் பூசியுள்ளார். இதனா
A


ஜம்மு , 19 செப்டம்பர் (ஹி.ச.)

ஜம்மு நகரில் லோயர் ரூப் நகர் பகுதி அருகே நீரஜ் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

அப்போது அவரது நண்பரான பவன் நாயர் (34), கேக்கின் ஒரு பகுதியை எடுத்து நீரஜின் முகத்தில் பூசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நீரஜுக்கும், பவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த ஜான் சொத்ரா, கவுரவ் சிங் மற்றும் சுகந்த் பாட்டி ஆகியோர் இருவரையும் சமாதானப்படுத்தி தகராறை முடிவுக்கு கொண்டுவர முயன்றனர்.

ஆனால் ஆத்திரம் தணியாத நீரஜ், தான் கொண்டு வந்திருந்த ‘குக்ரி’ என்ற ஆயுதத்தால் பவனை சரமாரியாக தாக்கினார்.

இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த பவன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

உடனே நண்பர்கள் அவரை மீட்டு ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பவன் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நீரஜை கைது செய்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக்கை முகத்தில் பூசியதால் ஏற்பட்ட சிறிய தகராறு நண்பரின் கொலையில் முடிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA