திருச்சூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதல் – பெண் பலி
கேரளா, 19 செப்டம்பர் (ஹி.ச.) கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புல்லாலி பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான அனிதா. இவர் செட்டுப்புழா சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, அன
பலி


கேரளா, 19 செப்டம்பர் (ஹி.ச.)

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புல்லாலி பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான அனிதா.

இவர் செட்டுப்புழா சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, அனிதா சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது.

பேருந்து மோதியதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த அனிதா மீது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பான காட்சிகள், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P