Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா , 19 செப்டம்பர் (ஹி.ச.)
மேற்கு வங்காள மாநிலம் சார்கிராம் மாவட்டம் குமார்பந்த் கிராமத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு இடையே கால்பந்து தொடர் போட்டி நடைபெற்றது.
இதில் அப்பகுதியை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின.
போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது. இதனால் வீரர்கள் அனைவரும் அருகில் இருந்த மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியது.
இந்த மின்னல் தாக்குதலில் தீபன் முர்மு (19) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA