விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு துணை நிற்கிறதா? - தமிழச்சி தங்கபாண்டியன்
சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.) விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு துணை நிற்கிறதா என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார், சென்னை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமா
Tamizhachi Thangapandian


சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)

விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு துணை நிற்கிறதா என

திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்,

சென்னை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (AAI) மாற்றி, வேறு ஆபரேட்டரைக் கொண்டு வர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

சென்னை விமான நிலைய செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய ஒன்றிய அரசிடம் உரிய அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, AAI-யை மாற்றி வேறு ஆபரேட்டரைக் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் கோருவது ஏன்?

விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு துணை நிற்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டதாக அறிவித்துவிட்டு, மறுபுறம் இருக்கும் சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க முயல்வது குறித்து முதலமைச்சர் தமிழ்நாடு மக்களுக்கு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் பொதுச் சொத்துகளை தனியார் நலன்களுக்காக தாரை வார்க்கும் எந்த முயற்சியையும் எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN