Enter your Email Address to subscribe to our newsletters

மதுராந்தகம், 19 செப்டம்பர் (ஹி.ச.)
மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.கனிதா சம்பத், மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று தனது கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத், மதுராந்தகம்
வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட
ஈசூர், பூதூர், தோட்டநாவல், கினார், முள்ளி, வளர்பிறை, விழுதமங்கலம், ஏறுவாக்கம், கீழவலம் ,மேலவலம், அறையப்பாக்கம், மேட்டுப்பாளையம், ஜானகிபுரம் கள்ளபிரான்புரம் அண்டவாக்கம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திறந்த வாகனத்தில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது மாநில மகளிர் அணி செயலாளர் வளர்மதி, மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம்,
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆணுர் பக்தவச்சலம், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தனபால், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயச்சந்திரன்
உள்ளிட்ட இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் பாஜக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN