Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 செப்டம்பர் (ஹி.ச.)
புதுடெல்லியின் மோதி நகர் பகுதிக்கு உட்பட்ட திலக் நகர், சகாபுரா, கலி எண் 11-ல் அமைந்துள்ள தரைதளம் மற்றும் இரண்டு மாடிகளைக் கொண்ட வீடு ஒன்றின் தரைதளத்தில் இன்று அதிகாலை சுமார் 3.25 மணியளவில் திடீரென தீப்பிடித்துள்ளது.
தீ மளமளவென பரவிய நிலையில், அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த வெடி விபத்தில் வீட்டில் இருந்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து அதிகாலை சுமார் 4.30 மணியளவில் நிலைய அதிகாரி பட்டி லால் தகவல் அனுப்பியுள்ளார்.
தகவல் கிடைத்தவுடன் டெல்லி தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டனர்.
ஒரு தண்ணீர் பீய்ச்சும் வாகனம், ஒரு சுவாசக் கருவி பொருத்தப்பட்ட தீயணைப்பு வாகனம் மற்றும் ஒரு தண்ணீர் பவுசர் ஆகியவை சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b