மீனாட்சி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் – பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வழங்கும் கோவில் நிர்வாகம்
சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றதைத் தொடர்ந்து, 20-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று விடுமுறை நாள் என்பதால
Bis


சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றதைத் தொடர்ந்து, 20-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று விடுமுறை நாள் என்பதால் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இதனால் கோவில் வளாகத்தில் நீண்ட வரிசை காணப்படுகிறது.

நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பக்தர்களுக்கு பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிஸ்கட் மற்றும் தண்ணீர் வழங்கப்படுவது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ