விவசாயிகளுக்கு தேவைப்பட்டால் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் – அமைச்சர் வினோத்
சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.) மேட்டூர் அணையில் இருந்து 45 நாட்களுக்கு பிறகு விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில், மீண்டும் தண்ணீர் திறந்து விடப்படும் என வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் த
Vinoth


சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)

மேட்டூர் அணையில் இருந்து 45 நாட்களுக்கு பிறகு விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில், மீண்டும் தண்ணீர் திறந்து விடப்படும் என வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை வேளாண்துறை அமைச்சர் வினோத் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

சென்னையில் 40 விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் 8 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக இன்று திருச்சியில் 3 அமைச்சர்கள் விவசாயிகளை சந்திக்க உள்ளதாகவும் அமைச்சர் வினோத் கூறினார்.

விவசாயிகளுக்கு தேவையான நேரத்தை ஒதுக்குவது, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேட்டூர் அணையில் இருந்து 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி மாதம் வரை சாகுபடி செய்வதற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வினோத்,

விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ