Enter your Email Address to subscribe to our newsletters

பொள்ளாச்சி, 19 செப்டம்பர் (ஹி.ச.)
பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து, மாணவர்களை ஏற்றிக்கொண்டு கூளநாய்க்கன்பட்டி ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பேருந்தின் மீது மோதியபடி சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் முருகேசன், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம், பேருந்தில் மோதிவிட்டு ஏன் நிற்காமல் செல்கிறீர்கள் என கேட்டதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரும் சேர்ந்து ஓட்டுநர் முருகேசனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முருகேசன் கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் 4 பேரையும் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ஓட்டுநர் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam