Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 19 செப்டம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட வேடந்தாங்கல், கரிக்கிலி, வெள்ளபுத்தூர், பாப்பநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது வேடந்தாங்களுக்கு வருகை தந்த வேட்பாளருக்கு பூங்கொத்து கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய மரகதம் குமரவேல், வேடந்தாங்கல் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு எத்தனை பட்டா
மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தாம் வெற்றி பெற்றால் சட்டமன்றத்தில் பேசி உடனடியாக மக்களுக்கு கிடைத்த வழிவகை செய்வோம்.
மதுராந்தகம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி கட்டித் தரப்படும்.
மேலும் தமிழக அரசு அளித்த வாக்குறுதியின் படி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 கூட்டமாக உயர்த்தி வழங்கப்படும்.
மேலும் தமிழக அரசு தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் மக்களுக்கு கிடைத்திட சட்டமன்றத்தில் பேசுவேன் என்று
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN