கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 8 கொலைகள் - கனிமொழி கண்டனம்
தமிழ்நாடு, 19 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 கொலைகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைச் சம்பவங்களே சாட்சி என திமுக
கனிமொழி


தமிழ்நாடு, 19 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 கொலைகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைச் சம்பவங்களே சாட்சி என திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக தெரிவித்துள்ளார்.

மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டின் Growth Rate-ஐ உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் Crime Rate-ஐ உயர்த்தி தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு” என விமர்சித்துள்ள கனிமொழி, மாநிலத்தில் அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் நிலையில், காவல்துறை உரிய முறையில் செயல்படுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா? இல்லை அதுவும் முதலமைச்சரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா?” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 கொலைகள் நடைபெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை முன்வைத்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தமிழக அரசிடம் கனிமொழி விளக்கம் கோரியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P