Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 19 செப்டம்பர் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஜன்வாடாவில் உள்ள பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி.ஆர். தொடர்புடையதாக கூறப்படும் பண்ணை
வீடு மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நிலங்கள் தொடர்பான உண்மை நிலவரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பிரஜா பவனில் இருந்து அங்கு புறப்பட்டுச் சென்றனர்.
கே.சி.ஆர்., கே.டி.ஆர். மற்றும் ஹரீஷ் ராவ் குடும்பத்தினர் விதிமுறைகளை மீறி நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதனால் காங்கிரஸ் தலைவர்கள் ஜன்வாடாவுக்கு செல்லும் நிலையில், அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பண்ணை வீட்டை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் செல்லும் வழியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, ஜன்வாடா பண்ணை வீடு அமைந்துள்ள நிலம் தன்னுடைய சொந்த சொத்து என்றும், கே.டி.ஆருக்கு அதில் எந்த உரிமையும் இல்லை என்றும் நிலத்தின் உரிமையாளர் பிரதீப் ரெட்டி தெரிவித்திருந்தார்.
அந்த நிலத்தை கே.டி.ஆருக்கு குத்தகைக்கு மட்டுமே வழங்கியுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA