Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் காலை, மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதிகளின் இருபுறங்களிலும் திரண்டு காத்திருந்தனர்.
சுவாமி வீதி உலா நடைபெற்றபோது, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கங்களை எழுப்பி வழிபட்டனர்.
வீதி உலாவின்போது பக்தர்கள் மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக பங்கேற்றனர்.
இதனால் நான்கு மாட வீதிகளும் விழாக்கோலம் பூண்டன.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை இன்று மாலை நடைபெற உள்ளது.
மாலை 6.30 மணிக்கு நடைபெறும் கருட சேவையை காண ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ