Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக டாக்டர் ராதாகிருஷ்ணனும், உறுப்பினராக மாஸ்கர்னஸும் பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்,
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் முன்னிலையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாஸ்கர்னஸ் ஆகியோர் பதவிப்பிரமாணம் மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இருவரும் மெய் உறுதிமொழி மற்றும் மறைகாப்பு உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி, விநியோகம், மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் ஒழுங்குமுறை பணிகளை மேற்கொள்ளும் முக்கிய அமைப்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆணையத்தின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு நிகழ்ச்சியில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு புதிய தலைவர் மற்றும் உறுப்பினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ