வானூரில் அமைச்சர் திறக்க உள்ள கட்டிடம் முன்பு மழைநீர் தேக்கம் – கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்குவாதம்
விழுப்புரம், 19 செப்டம்பர் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த தைலாபுரத்தில் சமூக நீதிப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை அமைச்சர் வன்னியரசு இன்று திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில், நேற்று பெய்த மழையால் ப
வன்னியரசு


விழுப்புரம், 19 செப்டம்பர் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த தைலாபுரத்தில் சமூக நீதிப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை அமைச்சர் வன்னியரசு இன்று திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிலையில், நேற்று பெய்த மழையால் பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காணப்பட்டது.

இதனை பார்த்த கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ஒருவர், கட்டிட ஒப்பந்ததாரரிடம், அமைச்சர் வருவது தெரிந்தும் இதுவரை தேங்கியுள்ள மழைநீரை ஏன் அகற்றவில்லை என்றும், பள்ளி வளாகம் சேறும் சகதியுமாக இருப்பது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லையா என்றும் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், அப்பகுதியில் தேங்கியிருந்த சேறு மற்றும் சகதியை அவரே சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, ஒப்பந்ததாரர் சார்பில் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியும், சேறும் சகதியுமான பகுதிகளை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam