வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை நிர்வாகம் தகவல்
சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.) வி.எஸ். பாபுவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக
Vsbabu


Gg


சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)

வி.எஸ். பாபுவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ். பாபுவுக்கு பல்துறை சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருவதுடன், தேவையான மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவப் பரிசோதனைகளின் அளவீடுகள் தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது உடல்நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அளித்து வரும் சிகிச்சைகளுக்கு வி.எஸ். பாபுவின் உடல்நிலை நன்றாக ஒத்துழைத்து வருவதாகவும், பல்துறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து தேவையான சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும் எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவ சேவைகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ