ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் 2-வது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளராக ஆடம் ஜாம்பா சாதனை
ஹராரே , 19 செப்டம்பர் (ஹி.ச.) ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது ஆஸ்திரேலிய சுழற
A


ஹராரே , 19 செப்டம்பர் (ஹி.ச.)

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஜாம்பா 123 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 201 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே 193 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 291 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதனால் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் வார்னே முதலிடத்திலும், ஜாம்பா 2-வது இடத்திலும் உள்ளனர்.

அதேவேளையில், ஆஸ்திரேலிய வீரர்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் 238 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஷேன் வார்னே 3-வது இடத்திலும், ஆடம் ஜாம்பா 7-வது இடத்திலும் உள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA