Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 02 செப்டம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த பெருக்கரனை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மரகதத்தால் ஆன முருகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கோவிலில் இருந்த மரகத முருகர் சிலை திடீரென காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சித்தாமூர் போலீசார், கோவிலில் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலை எப்போது திருடப்பட்டது, திருட்டில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மரகதத்தால் ஆன முருகர் சிலை திருடப்பட்ட சம்பவம் பெருக்கரனை மற்றும் அச்சரப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam