Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 02 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணுக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மந்திரி நாரா லோகேஷ் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பவன் கல்யாணின் பிறந்தநாளையொட்டி முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எனது அன்பு நண்பரும், ஜனசேனா கட்சி தலைவரும், துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பவர் ஸ்டார் என ரசிகர்களின் இதயங்களில் நீங்கள் நிலையான இடத்தைப் பெற்றுள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தை மறுகட்டமைக்கும் நோக்கில், கூட்டணி அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பவன் கல்யாண் தொடர்ந்து உழைத்து வருவதாகவும் சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார்.
பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியாக பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சாலை இணைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், பசுமையை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாண் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் வாழ வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல், மந்திரி நாரா லோகேஷும் பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், “கடவுள் கொடுத்த அண்ணன் பவன் கல்யாண் அவர்கள் நூறு ஆண்டுகள் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பவன் கல்யாணின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு சேவை மற்றும் நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு கொண்டாடி வருவது பாராட்டுக்குரியது என்றும் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA