ஹரிகிருஷ்ணாவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர் லோகேஷ் புகழஞ்சலி
அமராவதி , 02 செப்டம்பர் (ஹி.ச.) தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த நந்தமூரி ஹரிகிருஷ்ணாவின் 70-வது பிறந்தநாளையொட்டி, அவரது குடும்பத்தினர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் நாரா சந்திரப
A


அமராவதி , 02 செப்டம்பர் (ஹி.ச.)

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த நந்தமூரி ஹரிகிருஷ்ணாவின் 70-வது பிறந்தநாளையொட்டி, அவரது குடும்பத்தினர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் நாரா சந்திரபாபு நாயுடு, தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் ஆகியோர் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி, ஹரிகிருஷ்ணாவுடனான தங்களது நினைவுகளையும், அவருடனான நெருக்கமான உறவையும் சந்திரபாபு நாயுடுவும், லோகேஷும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர்.

சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள பதிவில்,

மறைந்த நந்தமூரி ஹரிகிருஷ்ணாவின் 70-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு எனது புகழஞ்சலியை செலுத்துகிறேன்.

சினிமா துறையிலும், அரசியலிலும் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் ஹரிகிருஷ்ணா. அவர் அனைவரின் இதயங்களிலும் என்றும் நிலைத்திருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், நாரா லோகேஷ் வெளியிட்டுள்ள பதிவில், ஹரிகிருஷ்ணாவை உருக்கமாக நினைவுகூர்ந்துள்ளார்.

அதில், “எங்கள் நந்தமூரி ஹரிகிருஷ்ணா மாமாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு எனது புகழஞ்சலியை செலுத்துகிறேன். அழியாத புன்னகையும், அன்பான அணுகுமுறையும் அவருடைய தனிச்சிறப்புகள். நடிகராகவும், மக்கள் தலைவராகவும் அவர் அனைவரின் அன்பையும் பெற்றவர்.

ஹரிகிருஷ்ணா உடல்ரீதியாக நம்மை விட்டு பிரிந்திருந்தாலும், தெலுங்கு மக்களின் இதயங்களில் அவர் என்றும் நிலைத்திருப்பார்” என்று லோகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

ஹரிகிருஷ்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது குடும்பத்தினரும் அவரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர். சினிமா மற்றும் அரசியல் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இந்த நாளில் நினைவுகூரப்பட்டன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA