திருச்சியில் இன்று பா.ஜ.க முக்கிய ஆலோசனைக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் தலைமையில் மாவட்ட தலைவர்கள் பங்கேற்பு
திருச்சி, 02 செப்டம்பர் (ஹி.ச.) தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சி சமயபுரத்தில் நடைபெறுகிறது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று காலை
BJP's main consultative meeting in Trichy today


திருச்சி, 02 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சி சமயபுரத்தில் நடைபெறுகிறது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று காலை தொடங்கும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் மற்றும் இணைப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பூத் கமிட்டிகளை பலப்படுத்துதல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான இலக்கு நிர்ணயம் குறித்து மாவட்ட தலைவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

தேர்தல் வியூகம், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் மற்றும் பிரச்சாரத் திட்டங்கள் குறித்தும் மாநில தலைமை மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b