Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கட்சிப் பணிகள் தொடர்பாக டெல்லி சென்றிருந்த அவருக்கு திடீரென தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தேவையான முதற்கட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் விமானம் மூலம் அவர் உடனடியாக சென்னை திரும்பினார்.
சென்னை வந்தடைந்ததும் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b