16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது
தஞ்சாவூர், 02 செப்டம்பர் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியைச் சேர்ந்த சந்தோஷ் (24) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சேதுபாவாசத்திரம் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்ற சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக
SCHOOL SEXUAL ASSULT


தஞ்சாவூர், 02 செப்டம்பர் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியைச் சேர்ந்த சந்தோஷ் (24) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சேதுபாவாசத்திரம் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்ற சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சந்தோஷ் தனிமைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (20), ஆறுமுகம் (19) மற்றும் 17, 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள், சந்தோஷை மிரட்டி விரட்டிய பின்னர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை அருகில் இருந்தவர்கள் கேட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சந்தோஷ், அரவிந்த், ஆறுமுகம் மற்றும் இரண்டு சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P