பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு ஆம்னி பேருந்து விபத்து- ஓட்டுநர் பலி, 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தருமபுரி, 02 செப்டம்பர் (ஹி.ச.) தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜக்கசமுத்திரம் புதிய தேசிய நெடுஞ்சாலையில் அரசு குளிர்சாதன ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார். 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். பெங்களூருவில் இருந்
விபத்து


தருமபுரி, 02 செப்டம்பர் (ஹி.ச.)

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜக்கசமுத்திரம் புதிய தேசிய நெடுஞ்சாலையில் அரசு குளிர்சாதன ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார். 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு ஆம்னி பேருந்து, ஜக்கசமுத்திரம் பகுதியில் சென்டர் மீடியம் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பேருந்தின் ஓட்டுநர் சில்லாரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், நடத்துநர் சங்கர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்ட காவல்துறையினர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சாலை விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P