கொரோனா கட்டுப்பாடுகளை மீறி போராட்டம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகள் ரத்து - எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிவாரணம்
சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.) கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்
Eps


High court


சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)

கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் டவுன் காவல் நிலைய போலீசார், கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த காலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் இரு தனித்தனி வழக்குகளை பதிவு செய்திருந்தனர்.

இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுக்களை விசாரித்த நீதிபதி, அரசியல்வாதிகளுக்கு ஜனநாயக ரீதியில் போராட்டங்களில் ஈடுபட உரிமை உள்ளதாக கருத்து தெரிவித்தார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், தேர்தல் விதிமீறல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கையும் ரத்து செய்து நீதிபதி வி. லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.

இதன் மூலம் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகளில், எடப்பாடி பழனிசாமி மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம் அளித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ