சிவகாசி நாடாளுமன்ற தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் சாத்தூரில் மறைவு
விருதுநகர், 02 செப்டம்பர் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த பாப்பு நாயக்கர் என்பவரது மகன் ராமமூர்த்தி வயது (92) இவர் சுதந்திரா கட்சி சார்பில் 1967 ஆம் ஆண்டு சிவகாசி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் வேட்ப
Ramamoorthy


விருதுநகர், 02 செப்டம்பர் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த பாப்பு நாயக்கர் என்பவரது மகன் ராமமூர்த்தி வயது (92)

இவர் சுதந்திரா கட்சி சார்பில் 1967 ஆம் ஆண்டு சிவகாசி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை விட 31,672 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர்

சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவில் சாத்தூர் சிவகாசி விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் கோவில்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக 1951 முதல் 1964 வரை விளங்கியது

1964 தொகுதி வரையறை மறு சீரமைப்பின்படி சிவகாசி நாடாளுமன்ற தொகுதி முதன் முறையாக உருவாக்கப்பட்டது இதற்கு பின்னர் நடைபெற்ற 1967 ஆம் ஆண்டு முதல் சிவகாசி நாடாளுமன்ற பொது தேர்தலில் சுதந்திரா கட்சி சார்பில் பி ராமமூர்த்தி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அய்ய நாடாரை எதிர்த்து போட்டியிட்டு முத்துராமலிங்க தேவர் ஆதரவில் வெற்றி பெற்றார்

முத்துராமலிங்க தேவர் மீது கொண்ட பற்றினால் அவரின் தேசப்பற்று மற்றும் அரசியல் ஈர்ப்பால் தேர்தலில் களம் இறங்கியதாக கூறப்படுகிறது

நீண்ட காலமாக சாத்தூரில் வசித்து வந்த பி ராமமூர்த்தி வயது மூப்பின் காரணமாக சாத்தூரில் தனது இல்லத்தில் காலமானார்

அவரது மறைவிற்கு சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மூத்த அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

Hindusthan Samachar / ANANDHAN