Enter your Email Address to subscribe to our newsletters

சிக்கிம், 02 செப்டம்பர் (ஹி.ச.)
பனிப்பாறை ஏரிகள் உடைந்து ஏற்படும் திடீர் வெள்ளமான GLOF
(Glacial Lake Outburst Floods) அபாயத்தை குறைக்க சிக்கிம் அரசு மூன்று முக்கிய பொறியியல் நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.
அதன்படி, ஷாகோ சோ ஏரியில் சூரியசக்தி மூலம் நீரை வெளியேற்றும் திட்டம், லோனக் பள்ளத்தாக்கில் உள்ள டோல்மா சம்பா பகுதியில் வெள்ளநீரைத் தேக்கி வைக்கும் கட்டமைப்பு மற்றும் குருதோங்மார் ஏரி வளாகத்தின் நீர் வெளியேறும் பகுதியில் பாதுகாப்புச் சுவர் அமைக்கும் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
பனிப்பாறை ஏரிகளால் ஏற்படும் அபாயங்களை மதிப்பிடுவதில் இருந்து, அதன் தாக்கத்தை குறைப்பதற்கான நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிக்கிம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் தாம்பே தெரிவித்துள்ளார்.
GLOF அபாயத்தை எதிர்கொள்வதற்கான தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சிக்கிம் அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P