Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
த.வெ.க வின் 100 நாட்கள். ஆட்சி சினிமா படம் பார்ப்பது போல உள்ளது.
எதார்த்தத்திற்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை
இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் இளைஞர்களை கவர்ந்து மாற்றம் என வாக்குறுதிகளை சொல்லி அவர்களே ஆட்சிக்கு வருவோமா என தெரியாமல் வெற்றிபெற்றுள்ளனர்
தமிழ்நாட்டு மக்கள் தங்களது தொகுதியில் போட்டியில் வேட்பாளரே தெரியாமல் சினிமா கதாநாயகனை நம்பி வாக்களித்து குடும்பத்தினரை வாக்களிக்க வைத்துள்ளார்கள்
தமிழை கூட சரியாக வாசிக்க தெரியாதவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கியுள்ளார்கள்
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழை கூட சரியாக பேச தெரியவில்லை இவர்களுக்கு அ, ஆ கூட தெரியவில்லையா? இவர்களுக்கு தற்குறிகள் என்பது சொல்வது சரிதான்
24 ஆம் புலிகேசி ஆட்சி்போல உள்ளது. அடிப்படை கணித அறிவு கூட இல்லாமல் பேசுகின்றனர் வருத்தமளிக்கிறது
சினிமாவில் இருந்து MGR , அம்மா வந்தார்கள் ஆனால் அவர்கள் ஆட்சியில் எதாவது இது போன்று குற்றச்சாட்டு இருந்தது
1969ல் காங்கிரஸ்க்கு மாற்றாக அண்ணா ஆட்சி அமைத்தபோதும், 1979 எம்ஜிஆர் ஆட்சியின்போதும் இளைஞர்கள் பதவியேற்றபோதும் தரமான அரசியல் தலைவர்களாக இருந்தார்கள், அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள்
படிப்பறிவில் வளர்ந்த தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்துள்ளது. GENZ தலைமுறைகள் மற்றும் இளைஞர்கள் யாரென்று தெரியாத நபரை தவறான ஆட்சியை உருவாக்கியிருக்கிறார்கள்
ஆதவ் அர்ஜூனா மில்லி லிட்டர் என சொல்ல தெரியாமல் மில்லி மீட்டர் என்கிறார்கள்.
தமிழ் பேச தெரியாது என சொன்னால் கிறிஸ்துவ மதம் என நிதியமைச்சர் சொல்கிறார்.
மதத்திற்கும் மொழிக்கும் என்ன சம்மந்தம். கன்றோடு சேர்ந்து திங்கும் என்பது போல கருப்பையா எம்எல்ஏ பேசுகிறார்
பலகட்சி நிர்மல்குமார் ஏதோஎதோ பேசுகிறார். சபாநாயகர் நடுநிலையாக பேசுவதுபோல அமைச்சர்களை தவறான கருத்தை பேச வைக்கிறார்.
ரவிவசாயிகள் தண்ணீர் காலம்தாழ்த்தி திறப்பதாக வருத்தத்தில் உள்ளனர். ஆனால் காலை தொடங்கி வீடு திரும்பும்வரை சூட்டிங் போல உள்ளார்.
அவரே எதிர்பார்க்காத்து நடந்துவிட்டது் எதோஎதோ அடித்துவிட்டார் மாட்டிக்கிட்டார்
மாற்றம் வேண்டும் என்ற காரணத்தை சொல்லி இளைஞர்கள் தற்போதைய அரசியலுக்கு எதிராக இருக்கிறார்கள்
இப்போது சினிமா கவர்ச்சியை நம்பிதான் கொண்டுவந்திருக்கிறார்கள்.
விஜயை வெற்றிபெற வைத்தது நியாயம், ஆனால் அவர்களது வேட்பாளர்களை எப்படி வெற்றி பெற வைத்தார்கள். 100 நாட்கள் முதலமைச்சர் மௌனவிரதம் இருக்கிறார்.
அவர்கள் எல்லோருக்குமே 4 ஆம் வகுப்பு மாணவனுக்கு உள்ள அடிப்படை. கணிணி அறிவு இல்லை.
விஷமத்தனமான ஒரு எண்ணத்தில் தவெக எம்எல்ஏ அமைச்சர்கள் உள்ளனர். விஜயால் எழுதிவைக்காமல் பேச முடியுமா என தெரியவில்லை
தவெக அமைச்சர் எம்எல்ஏ தற்குறிகள் மீது வருத்தம் இல்லை வாக்களித்த மக்களை நினைத்து தான் வருத்தம்.
மோசமான ஆட்சி களப்பிறளர்கள் ஆட்சி போன்ற இருண்ட ஆட்சி , தமிழ்மொழியை சொல்லி கொடுத்தாலும் வராது , அடிப்படை தமிழ் அறிவே வராது
தவெக அமைச்சர் எம்எல்ஏ தற்குறிகள் மீது வருத்தம் இல்லை வாக்களித்த மக்களை நினைத்து தான் வருத்தம்
மோசமான ஆட்சி களப்பிறளர்கள் ஆட்சி போன்ற இருண்ட ஆட்சி , தமிழ்மொழியை சொல்லி கொடுத்தாலும் வராது , அடிப்படை தமிழ் அறிவே வராது
தற்குறி பாராளுமன்றமாக மாறிவிடும் தற்குறி விஜய் கழகம் என வைக்கலாம். இவர்களை விமர்சிப்பதே நமக்கு அசிங்கமாக உள்ளது இதற்கு ஒரு முடிவு விரைவாக வரும். ஆதவ் அர்ஜூனா எந்த கட்சியில் இருந்தார்.
தவெக - அதிமுக என எப்படி சொல்ல முடியும் பதவி ஆசை உள்ளவர்களை சேர்த்து வைத்து கொண்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.
இவர்கள் விஷமத்தனமானவர்கள், விஷமிகள். இன்ஸ்டாகிராமால் ஆட்சிக்கு வந்தவர்கள் இன்ஸ்டாகிராமால் வீழ்வார்கள்.
இது ஆகாவழி ஆட்சியாக8️ஏட்டுச்சுரைக்காயாக உள்ளது. நிழலை பார்த்து வாக்களித்து ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழகத்தின் நலன்கருதி இந்த ஆட்சியை அனைத்து எதிர்கட்சிகளும் முடிவுக்கு கொண்டு வருவோம் என்று பேசினார்.
Hindusthan Samachar / ANANDHAN