Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 02 செப்டம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் நன்மங்கலம், பெருமாள் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி மஞ்சுளா (47).
இவர் கடந்த 21-ம் தேதி மதியம் 3 மணியளவில் துணிகளை துவைத்து குடியிருப்பின் கார் பார்க்கிங் பகுதியில் காயவைத்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது, அதே குடியிருப்பைச் சேர்ந்த விஜி (45), கம்பியில் காயவைத்திருந்த துணிகளை தள்ளிவிட்டு அங்கிருந்து நடந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மஞ்சுளாவுக்கும், விஜிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த விஜி, கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் மஞ்சுளாவின் தலையில் தாக்கினாராம். இதில் மஞ்சுளாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அழைத்து சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதனையில் தலையில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது.
இதற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிவர் சம்பவம் குறித்து மேடவாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 25ந் தேதி மஞ்சுளாவை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சம்பவம் குறித்த தகவலின் பேரில் மேடவாக்கம் காவல் நிலைய போலீசார் மருத்துவமனைக்கு சென்று மஞ்சுளா பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஹெல்மட்டால் தலையில் தாக்கியதில் ஏற்பட்ட இரத்த கசிவால் இறந்தாரா? வேறு நோய் தாக்கத்தால் இறந்தாரா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகே எதனால் இறந்தார் என தெரியவரும் என போலீசார் கூறினர்.
Hindusthan Samachar / ANANDHAN