முதுமலை வன சபாரிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் செல்போன் எடுத்துச் செல்ல தடை
நீலகிரி, 02 செப்டம்பர் (ஹி.ச.) முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள், வனப்பகுதிக்குள் சபாரி செல்லும்போது செல்போன்களை எடுத்துச் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்
Mudhu


Mn


நீலகிரி, 02 செப்டம்பர் (ஹி.ச.)

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள், வனப்பகுதிக்குள் சபாரி செல்லும்போது செல்போன்களை எடுத்துச் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை பார்வையிடுவதற்காக, வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள வாகனங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் சபாரிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இந்த நிலையில், வனப்பகுதிக்குள் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இனி தங்களது செல்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது என வனத்துறை புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு சுற்றுலாப் பயணிகளால் எந்தவித இடையூறும் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது, ரிங்டோன் உள்ளிட்ட சத்தங்கள் வனவிலங்குகளின் இயல்பான சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சபாரிக்கு செல்லும் முன்பு சுற்றுலாப் பயணிகளின் செல்போன்களை வனத்துறையினர் பாதுகாப்பாக பெற்றுக்கொண்டு வைத்திருப்பதற்கும், சபாரி முடிந்து வெளியே வந்ததும் அவற்றை மீண்டும் உரிய பயணிகளிடம் ஒப்படைப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வனவிலங்குகளின் பாதுகாப்பையும், அவற்றின் இயல்பான வாழ்விடச் சூழலையும் பாதுகாக்கும் வகையில் இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ