Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 02 செப்டம்பர் (ஹி.ச.)
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு BNSS பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதேபோல், தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா வரும் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், 05.09.2026 முதல் 31.10.2026 வரை BNSS பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்தில், முன் அனுமதி பெறாமல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நினைவு நாள் மற்றும் குருபூஜை நிகழ்வுகளை முன்னிட்டு மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Hindusthan Samachar / ANANDHAN