செங்கல்பட்டு–விழுப்புரம் வழித்தடத்தில் பொறியியல் பணிகள் காரணமாக 7 ரயில்கள் தாமதமாக இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை எழும்பூர்–விழுப்புரம் ரயில்வே பிரிவில் உள்ள பேரணி ரயில் நிலைய யார்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், செப்டம்பர் 3 முதல் 6-ஆம் தேதி வரை பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரய
Railway


சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை எழும்பூர்–விழுப்புரம் ரயில்வே பிரிவில் உள்ள பேரணி ரயில் நிலைய யார்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், செப்டம்பர் 3 முதல் 6-ஆம் தேதி வரை பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பேரணி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகளை மேற்கொள்வதற்காக லைன் பிளாக் மற்றும் பவர் பிளாக் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னை எழும்பூர்–விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் சில ரயில்கள் வழக்கமான நேரத்தை விட தாமதமாக இயக்கப்பட உள்ளன.

அதன்படி, 20665 சென்னை எழும்பூர்–திருநெல்வேலி வந்தே பாரத் ரயில், செப்டம்பர் 3, 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் வழித்தடத்தில் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

12635 சென்னை எழும்பூர்–மதுரை வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், செப்டம்பர் 3, 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் 1 மணி நேரம் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 06109 தாம்பரம்–திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில், செப்டம்பர் 3-ஆம் தேதி 1 மணி நேரம் 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

22614 அயோத்தி கான்ட்–ராமேஸ்வரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், செப்டம்பர் 2-ஆம் தேதி 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

17654 புதுச்சேரி–காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில், செப்டம்பர் 4 மற்றும் 6-ஆம் தேதிகளில் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 16112 புதுச்சேரி–திருப்பதி MEMU எக்ஸ்பிரஸ் ரயில், செப்டம்பர் 6-ஆம் தேதி 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

அதேபோல், 06059 தாம்பரம்–போடிநாயக்கனூர் சிறப்பு ரயில், செப்டம்பர் 4-ஆம் தேதி 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

பேரணி ரயில் நிலைய யார்டில் நடைபெறும் பொறியியல் பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் இந்த லைன் பிளாக் மற்றும் பவர் பிளாக் காரணமாக, மேற்கண்ட ரயில்கள் வழித்தடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதனால், மேற்கண்ட தேதிகளில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பயணிகள், ரயில்களின் இயக்க நேரத்தில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ