மூர்மார்க்கெட்–சூலூர்பேட்டை இடையே பயணிகள் ரெயில்கள் ரத்து
சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை சென்டிரல்–கூடூர் ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சில பயணிகள் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெதபரியா–நாயுடுபேட்டை இடையே செப்டம்பர் 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில், மதியம் 12.20
ரயில்


சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை சென்டிரல்–கூடூர் ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சில பயணிகள் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெதபரியா–நாயுடுபேட்டை இடையே செப்டம்பர் 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில், மதியம் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக சில பயணிகள் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 7.45 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கத்தில் சூலூர்பேட்டையில் இருந்து மாலை 6.40 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், சூலூர்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 4 மணிக்கு சூலூர்பேட்டை வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகின்றன.

இதனுடன், மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 9.25 மணிக்கு ஆவடி செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam