இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவி மைக் ஹசி நிராகரிப்பு
சென்னை , 02 செப்டம்பர் (ஹி.ச.) இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியை ஏற்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விடுத்த அழைப்பை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக் ஹசி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
A


சென்னை , 02 செப்டம்பர் (ஹி.ச.)

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியை ஏற்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விடுத்த அழைப்பை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக் ஹசி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் அணி சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இதன் காரணமாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிரெண்டன் மெக்கல்லம் சமீபத்தில் விலகினார்.

இதையடுத்து, நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், பிரபல பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெமிங், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு மைக் ஹசியை நியமிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கடந்த மாதம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியை ஏற்க மைக் ஹசி மறுத்துவிட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக, ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக தொடர்ந்து பணியாற்ற அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மைக் ஹசி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் நீண்ட காலம் விளையாடியுள்ளார். மேலும், 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியுடன் பகுதி நேர ஆலோசகராகவும் அவர் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA