Enter your Email Address to subscribe to our newsletters

பஞ்சாப், 20 செப்டம்பர் (ஹி.ச.)
2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலம் தழுவிய வீடு வீடாகச் செல்லும் பிரசாரத்தை முதலமைச்சர் பகவந்த் மான் துப்ரியில் தொடங்கி வைத்தார்.
இந்தப் பிரசாரத்தின்போது, ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட உள்ளது.
குறிப்பாக, இலவச மின்சாரம், ஆம் ஆத்மி கிளினிக்குகள் மூலம் இலவச மருத்துவ சேவை, அரசு பள்ளிகளில் இலவசக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விளக்கப்பட உள்ளது.
மேலும், அரசின் செயல்பாடுகள் அடங்கிய அறிக்கையை வீடு வீடாக வழங்கி, பொதுமக்களின் கருத்துகளையும் குறைகளையும் கேட்க ஆம் ஆத்மி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் பிரசாரத்தின் மூலம் 2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணியை ஆம் ஆத்மி கட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P