ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய அணி – அன்புமணி இராமதாஸ் வாழ்த்து
சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.) ஜப்பான் நாட்டின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று தனது பதக்க வேட்டையை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. மகளிருக்
Anbumani Ramadoss


சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.)

ஜப்பான் நாட்டின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று தனது பதக்க வேட்டையை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணி பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.

இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை இளவேனில் வாலறிவனும் இடம்பெற்றிருந்தார். அவருடன் சோனம் மாஸ்கர் மற்றும் விதர்ஷா ஆகியோரும் இணைந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் பயணத்தை தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய அணியில் இடம்பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர் மற்றும் விதர்ஷா ஆகியோருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு மேலும் பல பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும், இந்திய அணியின் பதக்க வேட்டை தொடர்ந்து வெற்றிகரமாக அமைய வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ