திருப்பதி ஏழுமலையான் கோயில் கருட சேவையில் மலையப்ப சுவாமி வீதிஉலா
திருப்பதி , 20 செப்டம்பர் (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அன்ன வாகனம், கல்ப விருக்ஷ வாகனம், முத்து பந்தல் வாகனம் என பல்வேறு வாகனங்களில் ம
A


திருப்பதி , 20 செப்டம்பர் (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அன்ன வாகனம், கல்ப விருக்ஷ வாகனம், முத்து பந்தல் வாகனம் என பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை இன்று இரவு நடைபெற்றது.

இதில் மலயைப்ப சுவாமி தங்க, வைர, பச்சை,மரகதம் கற்கள் பதிக்கிப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் லட்கணக்காண பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

வீதிஉலாவில் முன்னதாக பல்வேறு மாநிலஙகளில் இருந்து வந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகளும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களில் வேடம் அணிந்து பக்தர்கள் வீதிஉலாவாக வந்தனர்.

நான்கு மாடவீதியில் 2 லட்சம் பக்தர்கள் இருப்பு உள்ளதால் 1 லட்சத்திற்க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் சுவாமி வீதிஉலா காண திருமலைக்கு வந்தும் நேரில் காண முடியாமல் திருமலையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட திரைகளில் பார்த்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சுவாமி வீதிஉலாவில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் வெளியே வரமுடியாத வகையில் அனைத்து இடங்களில் அடைக்கப்பட்டு இருந்தால் நான்கு மாடவீதியில் இருந்து பக்தர்கள் வெளியே வரமுடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

தருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6 வது நாளான நாளை காலை அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA