ஆஸ்திரேலியாவின் சமூக ஊடக கட்டுப்பாடுகள் உலகிற்கே முன்னோடி - பிரதமர் அல்பானீஸ் பெருமிதம்
ஆஸ்திரேலியா, 20 செப்டம்பர் (ஹி.ச.) ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்துள்ள சமூக ஊடகங்கள் மீதான முன்னோடி கட்டுப்பாடுகளை, ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் டிம் குக் உலகத்துக்கே முன்னோடியானது என்று கருதுவதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பெருமிதம் தெரி
Australia's social media regulations are a global trailblazer – Prime Minister Albanese expresses pride.


ஆஸ்திரேலியா, 20 செப்டம்பர் (ஹி.ச.)

ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்துள்ள சமூக ஊடகங்கள் மீதான முன்னோடி கட்டுப்பாடுகளை, ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் டிம் குக் உலகத்துக்கே முன்னோடியானது என்று கருதுவதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் டிம் குக்கை சந்தித்த பிறகு அல்பானீஸ் இதனைக் கூறினார்.

டிம் குக் எங்களுக்கு நிறைய நேரம் ஒதுக்கினார். சமூக ஊடக விவகாரத்தில் நாங்கள் செய்துள்ள பணிகள் உலகத்துக்கே முன்னோடி என்று அவர் கருதுகிறார் என்று கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் இருந்து அல்பானீஸ் தெரிவித்த கருத்துகள் இன்று ஆஸ்திரேலியாவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.

இணைய பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியின் அடுத்த கட்டமாக, சமூக ஊடக பயனர்கள் தங்கள் பக்கங்களில் தாங்கள் காணும் உள்ளடக்கத்தை தேர்வு செய்யும் வசதியை வழங்கும் திட்டத்தை ஆஸ்திரேலியா இந்த மாதம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பரில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை தடை செய்த முதல் நாடாக ஆஸ்திரேலியா உருவெடுத்தது.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பல அரசுகளும் இதே போன்ற நடவடிக்கையை எடுத்து வருகின்றன, ஐரோப்பிய ஆணையம் சமீபத்தில் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுபோன்ற தடையை விதிக்க முன்மொழிந்துள்ளது.

இது குறித்து அல்பானீஸின் கருத்து கூறுகையில்,

ஆப்பிள் நிறுவன செய்தித் தொடர்பாளர், டிம் குக் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவை சுட்டிக்காட்டினார்.

அதில், குழந்தைகளை இணையத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வலுவான மற்றும் எளிமையான கட்டுப்பாடுகள் உட்பட எங்களது புதிய கண்டுபிடிப்புகளில் சிலவற்றை அல்பானீஸுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி என்று குக் குறிப்பிட்டிருந்தார்.

15 ஆண்டுகள் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய டிம் குக் சமீபத்தில் அந்த பொறுப்பில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b