Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெற உள்ளது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9, 2026 அன்று நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடைத்தேர்தல் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை முதல் தீவிர பரப்புரையை தொடங்க உள்ளார்.
இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியினர் முழு வீச்சில் களமிறங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பரப்புரை பயணத்தை நாளை தாராபுரம் தொகுதியில் இருந்து தொடங்குகிறார்.
தாராபுரத்தில் தொடங்கும் இந்த பரப்புரை தொடர்ந்து மதுராந்தகம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் நடைபெற உள்ளது.
வேட்பாளர்களை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் சீமான், வரும் அக்டோபர் 4-ம் தேதி தனது பரப்புரையை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b