Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 20 செப்டம்பர் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்பட்டு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு காய்ச்சல், உடல்நலக்குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தனர். ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்ததால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,
மழையால் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதாகவும் தெரிவித்தனர்.
குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் தடுக்க, சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P