Enter your Email Address to subscribe to our newsletters

பூம்புகார், 20 செப்டம்பர் (ஹி.ச.)
காவிரி ஆற்றின் கடைமடை பகுதியான ராசிமணல் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் பிரச்சாரப் பயணம் இன்று பூம்புகாரில் இருந்து தொடங்குகிறது.
காவிரியில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை சேமித்து, டெல்டா பாசனத்தை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் ராசிமணலில் அணை கட்டுவது அவசியம் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கைக்கு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
பூம்புகாரில் இன்று தொடங்கும் இந்த பயணம், காவிரி படுகை மாவட்டங்கள் வழியாக நடைபெற உள்ளது. காவிரி டெல்டா பகுதிகளை கடந்து, ஈரோடு, தருமபுரி, வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக புதுச்சேரி வரை இந்த பயணம் தொடர உள்ளது.
வழிநெடுகிலும் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டு கோரிக்கையின் நியாயத்தை எடுத்துரைக்க உள்ளனர்.
இந்த பிரச்சாரப் பயணம் வரும் செப்டம்பர் 24-ம் தேதி நிறைவு பெறுகிறது.
இறுதி நாளில் கோரிக்கை மனு அரசிடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b