Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 20 செப்டம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள கொல்லமேடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திருக்கழுக்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கொல்லமேடு பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கப்படாததால், அறுவடை செய்த நெல்லை பாதுகாப்பாக வைக்க முடியாமல் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் திடீர் மழையால் நனைந்து முளைக்கும் அபாயம் உள்ளதாகவும், இதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் கொள்முதல் நிலையம் அமைப்பதில் ஏற்படும் தாமதத்தை பயன்படுத்தி இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு நெல்லை கேட்பதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கொல்லமேடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்து, விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b