Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச)
சென்னை மாநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இன்று ஒரே நாளில் 1562 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.
இதற்காக சென்னை மாநகர காவல்துறை சார்பில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மற்றும் திருவொற்றியூர் ஆகிய நான்கு கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலங்கள் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் கரைப்பு பணிகளை பாதுகாப்பாக நடத்துவதற்காக பிரம்மாண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு பணியில் சுமார் 16,500 காவல்துறையினர் மற்றும் 2,000 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடற்கரை பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்க கடலோர காவல் படை, மீட்பு படையினர் மற்றும் மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b