Enter your Email Address to subscribe to our newsletters

அகமதாபாத், 20 செப்டம்பர் (ஹி.ச.)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தட்சிணி சொசைட்டியில் ஆண்டுதோறும் கணேசோத்சவம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், அகமதாபாத் மணிநகரில் உள்ள தட்சிணி சொசைட்டியில் நடைபெற்று வரும் கணேசோத்சவ கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
தட்சிணி சொசைட்டியில் அமைக்கப்பட்டிருந்த கணேசர் பந்தலுக்கு வருகை தந்த முதலமைச்சர் பூபேந்திர படேல், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி எடுத்தார்.
தொடர்ந்து, குஜராத் மாநில மக்கள் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புடன் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்தார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு விழா ஏற்பாட்டாளர்கள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
‘கணபதி பப்பா மோர்யா’ என்ற பக்தி முழக்கங்கள் பந்தல் முழுவதும் எதிரொலித்தன.
இதனால் அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
மேலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் அகமதாபாத் மேயர் ஹிதேஷ் பரோட், துணை மேயர் அஞ்சு ஷா, முக்கிய தலைவர் பிரேரக் ஷா, நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்முக் படேல், சட்டமன்ற உறுப்பினர் அமுல் பட் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் சொசைட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
.
Hindusthan Samachar / vidya.b