மறைமலைநகரில் கார் மோதி பெண் உயிரிழந்த வழக்கு- உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க இர்ஃபானுக்கு நீதிமன்றம் உத்தரவு
செங்கல்பட்டு, 20 செப்டம்பர் (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கார் மோதி பெண் உயிரிழந்த வழக்கில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க யூடியூபர் முகமது இர்ஃபானுக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை
சென்னை உயர்நீதிமன்றம்


செங்கல்பட்டு, 20 செப்டம்பர் (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கார் மோதி பெண் உயிரிழந்த வழக்கில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க யூடியூபர் முகமது இர்ஃபானுக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த முகமது இர்ஃபான், சமூக வலைதளத்தில் ‘இஃப்ரான் வியூஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இதில் பல்வேறு உணவு வகைகள் மற்றும் உணவகங்கள் தொடர்பான காணொளிகளை வெளியிட்டு வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இர்ஃபான் தனது மனைவியுடன் பென்ஸ் காரில் தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே கார் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் சென்றுகொண்டிருந்த கோமதி பகுதியைச் சேர்ந்த பத்மாவதி (55) என்பவர் மீது கார் மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், விபத்தில் உயிரிழந்த பத்மாவதியின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சத்து 69 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பாக மேலும் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam