மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் தீவிர வாக்கு சேகரிப்பு
செங்கல்பட்டு, 20 செப்டம்பர் (ஹி.ச.) மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் இன்று முதல் பிரச்சாரத்தை துவக்கினார். பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் மாவட்ட செயலாளர் கா.சுந்தர் கலந்து கொண்டு துவக்க
Paranthaman


செங்கல்பட்டு, 20 செப்டம்பர் (ஹி.ச.)

மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் இன்று முதல் பிரச்சாரத்தை துவக்கினார்.

பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் மாவட்ட செயலாளர் கா.சுந்தர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

பிரச்சாரத்தின் போது சூட்கேஸை தூக்கி காண்பித்து இதற்காகத்தான் இடைத்தேர்தல் வந்தது என பொதுமக்களிடம வாக்கு சேகரித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இதில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை துவக்கி வாக்கு சேகரித்து வரும் நிலையில் இன்று திமுக வேட்பாளர் பரந்தாமன் பிலாப்பூர், சித்தண்டி, மையூர், மாமண்டூர், ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்பொழுது பொதுமக்களிடையே எதற்கான இடைத்தேர்தல் என்று பேசிய பரந்தாமன் தற்போது நடைபெற்று வரும் நலத்திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

அதைத்தான் தற்போதைய தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

அவர்கள் புதுமையான எந்த திட்டமும் அறிவித்தும் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

படித்த இளைஞர்களுக்கு 4,000 ரூபாய் பணம் வழங்கப்படவில்லை. சிலிண்டர் வழங்கப்படவில்லை. 2500 ரூபாய் வழங்கப்படவில்லை.

ஆனால் கடந்த ஆட்சியில் திமுக அறிவித்த திட்டங்களை தான் இந்த ஆட்சி நடைமுறையில் வைத்துள்ளது.

எந்த விதமான திட்டங்களையும் அறிவிக்காத அரசு தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பதாக பொது மக்களிடையே பேசி வாக்கு சேகரித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN