Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 20 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் வைகை சிற்பி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் உள்ள 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் எந்தக் கட்சியிலும் அடிப்படை உறுப்பினர்களாக இல்லை.
தமிழகத்தில் உள்ள அரசியல் குப்பைகளை அள்ளியே ஆக வேண்டும்.
அதற்கான சரியான காலம் தற்போது வந்து கொண்டிருக்கிறது. என்று கூறினார்.
மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் சினிமா பிளாக் டிக்கெட் விற்பது போல கும்பாபிஷேக டிக்கெட்டுகளை விற்றதாக அரசு மீது அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், பெரியாரின் பெண் இன விடுதலை மற்றும் சாதி ஒழிப்புக் கொள்கைகளை நான் ஏற்கிறேன்.
ஆனால், அவரது கடவுள் மறுப்புக் கொள்கையையும் பிராமண துவேஷத்தையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டமன்றம் அனைத்து மதங்களுக்கும் பொதுவானது என்றும் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P