மதுரையில் ரவுடி சப்பாணி சரவணன் படுகொலை வழக்கு - 10 பேர் கைது
மதுரை, 20 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே நேற்று பட்டப்பகலில் பிரபல ரவுடி சப்பாணி சரவணன் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர். போலீசார் வ
மதுரையில் ரவுடி சப்பாணி சரவணன் படுகொலை வழக்கு - மகன் உட்பட 10 பேர் கைது


மதுரை, 20 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே நேற்று பட்டப்பகலில் பிரபல ரவுடி சப்பாணி சரவணன் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர்.

போலீசார் விசாரணையில், இந்த கொலைக்கு பின்னால் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலைக்கு பழிவாங்கும் நோக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு மதுரை மேலமாசி வீதியில் புஷ்பராஜ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் தான் தற்போது கொல்லப்பட்ட ரவுடி சப்பாணி சரவணன்.

தந்தை புஷ்பராஜ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக, அவரது மகன் பாலமுருகன் தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து இந்த கொலையை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளார்.

ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே சரவணனை வழிமறித்த பாலமுருகன் கும்பல், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதில் பாலமுருகன் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b